Sat. Mar 14th, 2026

விழுப்புரம், மார்ச் 14:
விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் இ.எஸ் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ் கல்வியியல் கல்லூரியில், மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தும் நோக்கில் மொழித் திறன் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கி, மொழித் திறன் பயிற்சி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்முருகன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியர் சத்யா, விரிவுரையாளர்கள் வேலவதாஸ், முன்னாள் கல்லூரி மாணவி அனுசுயா மற்றும் எஸ்.எம்.வி இ.சி கல்லூரி துணை பேராசிரியர் நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள சிறப்புரைகள் வழங்கினர்.

இப்பயிற்சியில் மாணவர்களுக்கு தகவல் தொடர்புத் திறன் வளர்ப்பு முறைகள், தகவல் தொடர்பின் வகைகள், கடினத் திறன்கள் (Hard Skills) மற்றும் மென்மையான திறன்கள் (Soft Skills) ஆகியவற்றை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இ.எஸ் கல்வியியல் கல்லூரியின் துணை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கே. மாரி
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்

By TN NEWS