திண்டுக்கல், மார்ச் 4
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.03.2026) காணொலிக்காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும் தேர்வுக்கு முன் மனஅழுத்தம் இல்லாமல் கவனமாக படித்து சிறந்த முறையில் தேர்வை எழுதுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) த. ஜான் பிரிட்டோ, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் த. கருணாநிதி, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) அ. சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்