Thu. Mar 5th, 2026

திண்டுக்கல், மார்ச் 4

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் இன்று (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் காலத்தில் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது, வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்

By TN NEWS