Thu. Mar 5th, 2026

திண்டுக்கல், மார்ச் 4

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட மேற்கு செயலாளர் பசும்பொன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்து கொண்டனர்.

புதியதாக இணைந்த அனைவரையும் அமைச்சர் ஐ. பெரியசாமி வரவேற்று, கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு செயல்படுமாறு வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்

By TN NEWS