வேலூர், மார்ச் 4:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த இனியன் (த/பெ. ராஜ்குமார்) என்ற மாணவன் அந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பயிற்சி ஆசிரியை ஒருவர் கடந்த திங்கட்கிழமை மாணவனை பிரம்பாலும் செருப்பாலும் அடித்ததுடன், கழுத்தின் மீது கால் வைத்து மிதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் வலியால் அவதிப்பட்ட மாணவன் நேற்று இரவு இந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாணவனின் குடும்பத்தினர் பள்ளிக்கு வந்து ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு விவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியையை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடமும் மாணவனின் குடும்பத்தினரிடமும் தன்னுடைய தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்