Thu. Mar 5th, 2026

ஆவடி, மார்ச் 4

மகாகவி பாரதியார் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவி ஆவடி ஜி. தனலட்சுமி மற்றும் கோபாலகிருஷ்ணன் தம்பதியரின் 20ஆம் ஆண்டு திருமண நாள் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு மாநிலத் தலைவி ஜி. தனலட்சுமி – கோபாலகிருஷ்ணன் தம்பதியருக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியின் போது தொழிலாளர்கள் தம்பதியருக்கு மாலை அணிவித்து, சால்வை அணிவித்து வாழ்த்தினர். தொடர்ந்து கேக் வெட்டி, பரிசுப் பொருட்கள் மற்றும் வெகுமதிகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் அனைவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு உற்சாகமாக விழாவை கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்
மா. மருது பாண்டி

By TN NEWS