3 பேர் கைது – 5 பவுன் தங்க நகை மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் 80 வயது முதியவர் சண்முகம் வீட்டில் நள்ளிரவில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி, சுமார் 5 பவுன் தங்க நகைகளை பறித்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பவித்ரா மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வேடசந்தூர் மேல்மாத்லதினிபட்டியைச் சேர்ந்த கதிர் (எ) கருப்பசாமி (21) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட 5 பவுன் தங்க நகைகளை மீட்டதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.