திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26) என்பவர், திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி, போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில், போடியைச் சேர்ந்த சத்யபிரியன், அவரது மனைவி அபி மற்றும் தந்தை கமலக்கண்ணன் ஆகியோர், அதிகளவில் ஏலக்காய் வாங்கித் தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பேரில், முத்துப்பாண்டியிடமிருந்து வங்கி பரிமாற்றம் மூலம் ரூ.3,08,31,900 பெற்றுக்கொண்டு, ஏலக்காய் வாங்கி வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும், பணத்தை திருப்பி கேட்டபோது, சத்யபிரியன் உள்ளிட்டோர் அடியாட்களை வைத்து, சாலையில் செல்லும்போது லாரி மூலம் மோதிவிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி. குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சத்யபிரியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ராமர், செய்தியாளர், திண்டுக்கல்