Sun. Apr 19th, 2026

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில், நகர் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் அழகுபாண்டியன் (43), அவரது மனைவி கலாமணி (39), இடையகோட்டை புலியூரைச் சேர்ந்த சரவணன் மனைவி காந்தாமணி (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திர மோகன்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS