வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (பிப். 28):
மேல் காவனூர் பகுதியில் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்காக தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை அப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பகலில் சூரியன் – இரவில் விண்மீன் விருந்து
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை:
சூரியன் மற்றும் அதன் கரும்புள்ளிகள் (Sunspots) மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் காண்பிக்கப்பட்டது.
இரவு 7 மணி முதல் 1.30 மணி வரை:
நிலா
வியாழன்
சனி
Orion Nebula
Great Bear
Polaris
Pleiades (கார்த்திகை)
Taurus
மொத்தம் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் கலந்து கொண்டு விண்வெளி காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
கலந்து கொண்டவர்கள்.
ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் ஸ்ரீதர்
மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் மது செழியன்
வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, சுடர்க்கொடி
தனி வட்டாட்சியர் / ஆதிதிராவிட நல அலுவலர் வெங்கடேசன்
பிஆர்சி மேற்பார்வையாளர் சிவக்குமார்
கே.வி.குப்பம் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்
பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்
இந்த வான் நோக்குதல் நிகழ்ச்சி, மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்தது. கிராமப்புறப் பள்ளியில் இத்தகைய விண்வெளி அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

