திண்டுக்கல்,
பழனி இருந்து திருச்சி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அந்த நபர் ஒட்டன்சத்திரம் பகுதியில் பேருந்தில் ஏறியுள்ளார். பின்புற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த அவர், பேருந்தின் உள்ளக விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னர், தனது வேஷ்டியை பயன்படுத்தி பேருந்தின் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெட்டியாசத்திரம் காவல் நிலையம் போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவரின் அடையாளம் குறித்து போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ராமர்
⚠️ உதவி தேவைப்பட்டால்:
உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மனஅழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், உடனடியாக உதவி கோருங்கள். இந்தியாவில் KIRAN மனநலம் உதவி எண்: 1800-599-0019 (24×7).
உங்கள் வாழ்க்கை முக்கியமானது. உதவி கிடைக்கும்.