Dindigul: திண்டுக்கல்லை அடுத்த ம.மு. கோவிலூர் அருகே உள்ள பெரிய கோட்டைப் பகுதியில், பெரிய கோட்டையைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவர் முத்தன் (எ) மருதமுத்து, நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையில், வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிக்குமார், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
சந்திர மோகன்