Sun. Apr 19th, 2026

Gudiyatham: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் பிப்ரவரி 27 அன்று நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த இரங்கல் கூட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார்.

இரங்கல் கூட்டத்தில் வேதாச்சலம், விடுதலை செழியன், ஜெய் சிவகுமார், சரவணன், பிரவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, மறைந்த தலைவர்களின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS