Sat. Feb 7th, 2026

கொட்டமிட்டா கிராமத்தில் நடைபெற்ற விழா
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது.

அரசின் இலவச சைக்கிள் திட்டம் தொடக்கம்
இந்த விழாவில் மோடிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயப்பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச சைக்கிள் மிதிவண்டி திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்தத் திட்டம் மாணவர்களின் பள்ளி வருகையை ஊக்குவிக்கும் வகையிலும், கல்வித் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும் அமையப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் பங்கேற்பு
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர். இலவச மிதிவண்டி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசின் இந்த நலத்திட்டத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS