நகை கடன் பெயரில் முறைகேடு – பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு.
பொம்மிடி | தர்மபுரி மாவட்டம்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு கடன் பெயரில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றதாகக் கூறி, 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நகை கடன் பெற்ற 500-க்கும் மேற்பட்டோர்
இந்த தனியார் நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பொம்மிடியில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவெங்கும் கிளைகள் உள்ள நிறுவனம் என்பதால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில், பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு நகை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
அதிர்ச்சி அளித்த குறுஞ்செய்தி, மின்னஞ்சல்கள்
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நகை அடகு வைத்த வாடிக்கையாளர்களின் பெயர்களுக்கு,
“நீங்கள் பெற்ற கடனைவிட பல மடங்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்”
என மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வந்த தகவல்களை எடுத்துக்கொண்டு நிதி நிறுவனக் கிளையை அணுகியபோது, அங்கு நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
ஊழியர்கள் கூட்டுச்சேர்ந்து மோசடி? விசாரணையில்,நகை அடகு வைக்க வந்த வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல்,
முறைகேடான ஆவணங்கள் தயாரித்து
அவர்கள் வைத்த நகைக்கு மேலாகபல மடங்கு கூடுதல் நகை கடன் பெற்றதாக கணக்கில் காட்டிநிதி நிறுவன ஊழியர்கள் கூட்டு சேர்ந்து பணத்தை கையாடல் செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.பொதுமக்கள் முற்றுகை – நிறுவனம் மூடல்இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பொம்மிடியில் உள்ள நிதி நிறுவனத்தின் முன்பு திரண்டு,
“முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”என கோஷமிட்டபடி முற்றுகையிட்டனர்.
இதன் காரணமாக அந்த நிதி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது.
போலீஸ் தலையீடு – விசாரணை தொடக்கம்
தகவல் அறிந்து விரைந்து வந்த பொம்மிடி காவல் துறையினர், பொதுமக்களையும் நிதி நிறுவன ஊழியர்களையும் சமாதானப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் அங்கு கூடத் தொடங்கியதால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில்,பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் காவல் நிலையத்தில் நேரில் வந்து புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
மாவட்ட, மண்டல மேலாளர்கள் உறுதி
இந்த விவகாரம் குறித்து நிதி நிறுவனத்தின் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வந்த நிறுவன பொறுப்பாளர்கள்,
“இரு தினங்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு,முறைகேட்டில் ஈடுபட்ட எந்த ஊழியர் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பணமும் நகையும் திருப்பி வழங்கப்படும்”என உறுதியளித்தனர்.
இந்த உறுதியைத் தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
20-க்கும் மேற்பட்டோர் புகார்
இச்சம்பவம் தொடர்பாக, 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி