Tue. Jan 13th, 2026

புதிய “ஜீவன் உத்தவ்” காப்பீட்டு திட்டம் அறிமுகம்.

குடியாத்தம் | ஜனவரி 12

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) நிறுவனத்தின் குடியாத்தம் கிளையின் 40-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய “ஜீவன் உத்தவ்” காப்பீட்டு திட்ட அறிமுக விழா, குடியாத்தம் எல்ஐசி கிளையில் திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், குடியாத்தம் கிளை மேலாளர் திரு. என். குமரேசன், புதிய ஜீவன் உத்தவ் காப்பீட்டு திட்டத்தை வெளியிட, அதனை ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தின் தென் மண்டல செயலாளர் திரு. ஜே.கே.என். பழனி பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் பங்கேற்றோர்

இந்த விழாவில் உதவி கிளை மேலாளர் – திரு. ஏ. தீனதயாளன்
உதவி நிர்வாக அதிகாரிகள் – திரு. கே. கண்ணன், திரு. சி. சுந்தர்
அலுவலக ஊழியர்கள் – திரு. சம்பத், திரு. ஈஸ்வரன், திரு. இளங்கீரன், திரு. செல்வம்

முகவர் சங்க தலைவர் – திரு. எம். குலசேகரன்

முகவர்கள் – திரு. சரவணன், திருமதி மல்லிகா, திருமதி விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

40 ஆண்டுகள் சேவை – நம்பிக்கையின் அடையாளம்

40 ஆண்டுகளாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு எல்ஐசி நிறுவனம் வழங்கி வரும் சேவைகள் குறித்து நிகழ்வில் நினைவுகூரப்பட்டதுடன், புதிய “ஜீவன் உத்தவ்” திட்டம் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS