Mon. Jan 12th, 2026

2026 தேர்தல் இலக்குடன் டிஜிட்டல் அரசியல் களத்தில் முழு தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் திறன், டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

புதுக்கோட்டை | ஜனவரி 11 :
சோசியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) மாநில மாநாடு இன்று புதுக்கோட்டையில் எழுச்சியுடனும், பெரும் பங்கேற்புடனும் நடைபெற்றது.

முன்னதாக, மாநாட்டை மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, SDPI தமிழகத்தின் பொருளாளர் கோவை முஸ்தபா QR Code மற்றும் Google Forms மூலம் தொண்டர்கள் பதிவு செய்யும் டிஜிட்டல் அமைப்பைத் தொடங்கி வைத்தார்.

தலைமையும் ஒருங்கிணைப்பும்.

இந்த மாநாடு, ஐடி விங் மாநில பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான அகமது நவவி தலைமையில் நடைபெற்றது. மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஷபீக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சதாம் உசேன் மாநாட்டின் தொகுப்புரையாற்றினார்.

டிஜிட்டல் அரசியல் தொடக்கங்கள்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக,

மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக் – ட்விட்டர் (X) பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மாநில பொதுச் செயலாளர் ஏ.கே. கரீம் – SDPI IT Wing Logo-வை அறிமுகம் செய்தார்.

மாநில செயலாளர் சகோதரி நஜ்மா – SDPI ONE LINK என்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், மாநில செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, பாஸ்டர் V. மார்க், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ஸலாஹுதீன் மற்றும் ஐ.டி. விங் மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைமையின் சிறப்புரை.

மாநாட்டில் SDPI கட்சியின், மாநில தலைவர் நெல்லை முபாரக்,மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச. உமர் பாருக், ஆகியோர் சிறப்புரையாற்றி, டிஜிட்டல் அரசியல், மக்கள் அரசியல் மற்றும் சமூக நீதி குறித்து விரிவாக உரையாற்றினர்.

1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட IT Wing நிர்வாகிகள், மாவட்ட–மண்டல பிரதிநிதிகள் கலந்து கொண்டு, SDPI கட்சியின் டிஜிட்டல் அரசியல் பாதையை வலுப்படுத்தும் வகையில் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.

1️⃣ 2026 தேர்தல் – IT Wing முன்னணிப் போர்ப்படை.

“களத்தைத் தயார் செய்வோம் – 2026இல் வெல்வோம்!” என்ற SDPI தேர்தல் முழக்கத்தை வெற்றியாக்க,
IT Wing-ஐ கட்சியின் முன்னணிப் போர்ப்படையாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
சமூக ஊடகங்கள், டிஜிட்டல் பிரச்சாரம், ஆன்லைன்–ஆஃப்லைன் களப்பணிகள், பயிற்சி முகாம்கள் மூலம்
மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதி அளவில் IT Wing செயல்பாடுகளை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

2️⃣ தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி மறுசீரமைப்பு

AI, IT, நவீன தொழில்நுட்பங்களை கல்வியில் உடனடியாக இணைக்க வேண்டும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், ஸ்மார்ட் வகுப்பறைகள், AI சார்ந்த பாடத்திட்டங்கள், தொழில்துறை சார்ந்த நடைமுறைப் பயிற்சிகள், அமல்படுத்த வேண்டும் என மத்திய–மாநில அரசுகளை மாநாடு வலியுறுத்தியது.

3️⃣ தொழில்நுட்ப முதலீடு & இளைஞர் திறன் மேம்பாடு

AI, IT, டிஜிட்டல் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப்கள் ஆகிய துறைகளில்
சர்வதேச முதலீடுகளை ஈர்க்க மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் உருவாக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் புதிய TIDEL (IT) பூங்காக்கள் அமைத்து,
அனைத்து மாவட்டங்களிலும் IT & AI திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும் என கோரப்பட்டது.

4️⃣ டிஜிட்டல் பாதுகாப்பு & சமூக ஊடக ஒழுங்குமுறை

சைபர் குற்றங்கள், போலி செய்திகள், வெறுப்புப் பிரச்சாரம் அதிகரிப்பதை மாநாடு கவலையுடன் சுட்டிக்காட்டியது.
பெண்கள் மீதான சமூக ஊடக தாக்குதல்களைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொறுப்புணர்வுடன் செயல்படும், சமூக ஒற்றுமையைப் பேணும் டிஜிட்டல் சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

5️⃣ உலக அரசியல் – அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு

வெனிசுவேலா, கிரீன்லாந்து போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை.
இத்தகைய ஆதிக்க முயற்சிகளுக்கு எதிராக இந்தியா தைரியமான, சுயாதீனமான குரலை உலக அரங்கில் எழுப்ப வேண்டும் என ஒன்றிய அரசை மாநாடு வலியுறுத்தியது.

நிறைவுரை

மாநாட்டின் இறுதியாக மாநில செயலாளர் வழக்கறிஞர் ஹஸ்ஸான் பைஜி நன்றியுரை ஆற்றினார்.
இந்த மாநாடு, SDPI கட்சியின் டிஜிட்டல் அரசியல் பாதையைத் தெளிவுபடுத்தும் முக்கிய மைல்கல்லாக அமைந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.

By TN NEWS