Mon. Jan 12th, 2026

வேலூர் | ஜனவரி 11 :
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட தலைவர் திரு. சீனிவாசன் தலைமை தாங்கினார்.

விழாவின் தொடக்கமாக மாவட்ட செயலாளர் திரு. முருகன் அனைவரையும் வரவேற்றார்.இந்த முப்பெரும் விழாவில்,

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்,

கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள்,
பத்தாம் வகுப்பில் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே மேடையில் மிகச் சிறப்பாக கௌரவிக்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக,

தமிழ் ஆசிரியர் கழகத்தின் சிறப்பு தலைவர் திரு. ஆறுமுகம்,
ராணிப்பேட்டை தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் திரு. பழனி,
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வேலூர் மாவட்ட தலைவர் திரு. ஆர். ஜெயகுமார்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட செயலாளர் திரு. ஜோசப் ண்ணையார்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில், தமிழ்மொழி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற காரணமான தமிழக தமிழ் ஆசிரியர் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS