Sat. Jan 10th, 2026

திருவனந்தபுரம் | ஜனவரி —

35 ஆண்டுகளாக இடதுசாரி கொள்கைகளுடன் அரசியல் பயணத்தில் இருந்த ரெஜி லூக்காஸ், இன்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது அரசியல் மாற்றம் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,
“இடதுசாரி கொள்கை பிடிக்கவில்லை என்பதற்காக அரசியல் பயணத்தை மாற்றவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து பயணிப்பதே தற்போதைய சூழலில் சரியான முடிவு என உணர்ந்து இந்த தீர்மானத்தை எடுத்தேன்” என்றார்.

மேலும்,
“நாட்டின் வளர்ச்சி சார்ந்த அரசியலையே இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில், கேரளாவிலும் எதிர்காலத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மாற்றம் ஒன்றே மாறாதது” என அவர் தெரிவித்தார்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் : வி. மணிகண்டன் வேலாயுதன்
கன்னியாகுமரி மாவட்டம்


By TN NEWS