குடியாத்தம் | ஜனவரி 8
தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், நெல்லூர்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட லிங்குன்றம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இந்த பரிசுத் தொகுப்பில், ரூ.3,000 ரொக்கம், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை அடங்கின.
இந்த நிகழ்ச்சியில், வேலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் எம்.பி. கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
நிகழ்வில், நெல்லூர்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை,
வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா பிரவணம்,
கூட்டுறவு பதிவாளர் தனலட்சுமி,
வருவாய் ஆய்வாளர் காமராஜ்,
மாவட்ட மற்றும் ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள், மகளிர் அணியினர், கிளைக் கழக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்