Sat. Jan 10th, 2026

குடியாத்தம் | ஜனவரி 6

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், திருக்குறள் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் கடந்த 5.1.2026 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தின் உன்னத படைப்பான திருக்குறளின் சமூக, அறநெறி, மனிதநேய கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. எபநேசர் தலைமை தாங்கினார்.
தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு. கல்பனா வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில்,
விலங்கியல் துறை தலைவர் சிவகுமார்,
கணிதத் துறை பேராசிரியர் முனைவர் ஸ்ரீதர்,
இயற்பியல் துறை தலைவர் முனைவர் தாமரை,
வரலாற்றுத் துறை தலைவர் விஜயரங்கம்,
வேதியியல் துறை தலைவர் முனைவர் தமிமுன் அன்சாரி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில்,
பேராசிரியர்கள் முனைவர் வளர்மதி, முனைவர் தமிழ்ச்செல்வன், முனைவர் முகமது அலி ஜின்னா, முனைவர் குமாரி, முனைவர் சுஜாதா, முனைவர் தமிம் மன்பூர்
ஆகியோர் திருக்குறளில் இடம்பெறும் அறம், பொருள், இன்பம், சமூக ஒழுக்கம், மனிதநேயம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆழமான கருத்துரைகளை வழங்கினர். அவர்களின் உரைகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் பா. சம்பத்குமார் மற்றும் திருமதி சங்கீதா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் முனைவர் கோ. ருத்ரமூர்த்தி நன்றி கூறினார்.

இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை தமிழ்த் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, திருக்குறளின் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS