Sat. Jan 10th, 2026


தமிழ்நாடு அரசு அறிவித்த ‘TAPS’ – அரசு ஊழியர்களுக்கு உறுதியான ஓய்வூதியம்.

சென்னை | ஜனவரி 03, 2026

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு,
“தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)” என்பதை அறிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக CPS (Contributory Pension Scheme) காரணமாக நிலவிய
“ஓய்வு பெறும் போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?”
என்ற குழப்பத்திற்கு இந்தத் திட்டம் முழுமையான முடிவை கொண்டு வந்துள்ளது.

🔹 TAPS – முக்கிய அம்சங்கள்:

▪️ கடைசி மாத ஊதியத்தின் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
▪️ 10 ஆண்டு பணிக்காலம் இருந்தால் ஓய்வூதியத் தகுதி
▪️ ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (DA) உயர்வு
▪️ குடும்பத்தினருக்கு 60% குடும்ப ஓய்வூதியம்
▪️ ₹25 லட்சம் வரை பணிக்கொடை (Gratuity)
▪️ CPS-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்

🔹 CPS Vs TAPS:

CPS-ல் சந்தை முதலீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியம்,
TAPS-ல் முழுமையான அரசின் உறுதி பெற்ற ஓய்வூதியமாக மாற்றப்பட்டுள்ளது.

🔹 அரசின் நிதிச் சுமை:

ரூ. 23,000 கோடி ஒருமுறை செலவு மற்றும்
ஆண்டுதோறும் கூடுதல் நிதிச்சுமை இருந்தபோதும்,
அரசு ஊழியர்களின் எதிர்கால நலனை முன்னிறுத்தி
தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

🔹 நம்பிக்கை அளிக்கும் தீர்மானம்:

TAPS திட்டம்:
▪️ அரசு ஊழியர்களுக்கு நிச்சயமான ஓய்வூதியம்,
▪️ குடும்பங்களுக்கு பாதுகாப்பு,
▪️ சமூகத்திற்கு நம்பிக்கை
என்ற மூன்றையும் ஒருசேர வழங்குகிறது.

அரசு ஊழியர்களின் உழைப்பிற்கு அரசு வழங்கும் நியாயமான பலனாக TAPS திட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.


✍️ தொகுப்பு : ஷேக் முகைதீன் | இணை ஆசிரியர்

By TN NEWS