டிசம்பர் 30
தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரம் கிராமத்தில், தார் சாலை போடாமலேயே சாலை அமைத்ததாக பொய்யான கணக்கு காட்டி ரூ.67 லட்சம் அளவிலான ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கிராமம் முழுவதும் வீதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டர்கள் ஒட்டப்பட்டதற்கு பின்னரே, நேற்று அவசரகதியில் அந்த பகுதியில் சாலை வசதி அமைக்கப்பட்டதாகவும், ஆனால் போடப்பட்ட சாலை தரமற்றதாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், மீண்டும் அந்த பகுதியில் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து பரபரப்பான சூழல் நிலவுகிறது. சாலை பணியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி

