Sat. Jan 10th, 2026

டிசம்பர் 30

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அமைந்துள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், 1983 முதல் 2023 வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவ–மாணவியர்களின் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ. எபெனேசர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கல்லூரியின் வளர்ச்சி, வளாகத் தூய்மை, தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், 1983 முதல் 2023 வரை கல்வி பயின்ற சுமார் 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கணிதத்துறை தலைவர் முனைவர் செ. கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் பேராசிரியர்கள் முனைவர் வ.க. சிவகுமார், முனைவர் அ. தாமரை, முனைவர் ந.கெ. லட்சுமி, முனைவர் மு. மலர்விழி, முனைவர் அ. ஸ்ரீதர் உள்ளிட்ட அனைத்து துறைகளின் பேராசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS