Sun. Jan 11th, 2026

சென்னை / டெல்லி:

இந்தியன் ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பான IRCTC, பயணிகள் முன்பதிவு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஏற்கனவே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளுக்கு IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்து வரும் நிலையில், தற்போது 60 நாட்களுக்கு முன்பாக செய்யப்படும் முன் பதிவுகளுக்கும் ஆதார் இணைப்பு அவசியம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய விதிமுறை என்ன?

ஒரு குறிப்பிட்ட தேதியில் பயணம் செய்ய,
60 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவில் டிக்கெட் பெற வேண்டுமெனில்,
IRCTC கணக்குடன் ஆதார் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த புதிய விதிமுறை 2026 ஜனவரி 12 முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது. அன்றைய தினத்திலிருந்து,
ஆதார் இணைக்கப்படாத IRCTC கணக்குகள் மூலம் காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவில் டிக்கெட் எடுக்க முடியாது என IRCTC தெரிவித்துள்ளது.
படிப்படியாக அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்.
டிசம்பர் 29 முதல்.
காலை 8 மணி – மதியம் 12 மணி வரை
👉 ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி

மதியம் 12 மணிக்கு பிறகு.
👉 ஆதார் இணைக்காதவர்களும் முன்பதிவு செய்யலாம்

ஜனவரி 5 முதல்.

காலை 8 மணி – மாலை 4 மணி வரை
👉 ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகள் மட்டுமே அனுமதி

ஜனவரி 12 முதல்.

காலை 8 மணி – இரவு 12 மணி வரை (முழு நாள்)
👉 ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்

பயணிகளுக்கு IRCTC அறிவுறுத்தல்

புதிய விதிமுறைகள் காரணமாக, டிக்கெட் முன்பதிவில் சிக்கல் ஏற்படாமல் இருக்க, பயணிகள் தங்களது IRCTC கணக்குடன் ஆதாரை முன்கூட்டியே இணைத்துக் கொள்ள வேண்டும் என IRCTC அறிவுறுத்தியுள்ளது.

ஜே. அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் – தலைமை செய்தியாளர்

By TN NEWS