Sat. Jan 10th, 2026

மானூர் | நெல்லை மத்திய மாவட்டம் | டிசம்பர் 24, 2025

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையில் மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் நெல்லை மத்திய மாவட்டம் மானூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மத்திய மாவட்ட செயலாளருமான திரு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமை தாங்கினார்.

இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராபர்ட் புரூஸ், நெல்லை மத்திய மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் திரு. கே.எம்.ஏ. நிஜாம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு. சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் திரு. ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மக்கள் நீதி மய்யம் (மநீம) உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு,

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பாதுகாக்க வேண்டும்,
ஏழை–எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்
என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

மாவட்ட துணை செயலாளர் மணப்படை எம். மணி,

மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மன்றம் வை. வேலுச்சாமி,

தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சுண்டங்குறிச்சி மகேந்திரன்,

மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ. மஸ்தான்,

பாளை ஒன்றியம் சொரிமுத்து,

மானூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வேதப்பாண்டியன்,

மானூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி,

அழகை ஊராட்சி செயலாளர் அழகுதுரை,

கிளை செயலாளர் சுப்பையாபுரம் செ. மனோகர்,

செட்டிகுறிச்சி சண்முகைய்யா,

வாகை சுப்பிரமணி,

அழகை முத்துக்குமார்,

வட்டச் செயலாளர் துளசி நம்பி,

நல்லையா, மாரிச்சாமி,

நாரணம்மாள்புரம் முன்னாள் கவுன்சிலர் சிவசுப்பு,

வழக்கறிஞர் மில்ட்ரி ஜெ. சந்திரசேகர், B.A., BL
மானூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
நெல்லை மத்திய மாவட்டம்

உட்பட பெருந்திரளான மகளிரணியினரும் கழக கொடிகளுடன் கலந்து கொண்டு வின்னதிர முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

 

By TN NEWS