திருவள்ளூர்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், தமிழகமெங்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணம், கடந்த நவம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் வடக்கு மாவட்டம் – கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி – கவரப்பேட்டையில்,
டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பயணத்தை முன்னிட்டு, முகூர்த்த கால் நடுதல் மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சிறுணியம் பி. பலராமன்,கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான திரு. கே. எஸ். விஜயகுமார், ஆகியோர் பூமி பூஜை செய்து விழா பணிகளை தொடங்கி வைத்தனர். தொண்டர்களுக்கான குடிநீர்,அடிப்படை வசதிகள்,
மேடை, ஒழுங்கமைப்பு உள்ளிட்ட பல்வேறு விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன் ராஜா, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், ஸ்ரீதர், ரமேஷ் குமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோதண்டன், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேதகிரி, பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாத்,
கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் ரவி, மேஞ்சூர் ஒன்றிய செயலாளர் வினோத், முத்துக்குமார், சோழவரம் ஒன்றிய செயலாளர் சுந்தரவதனம், பூண்டி முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் வெங்கட்ரமணா,மாவட்ட பிற அணி செயலாளர்கள் இமயம் மனோஜ், சிராஜுதீன், புரட்சி சுரேஷ்,வடமதுரை தனசேகர்,உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் வட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நமது நிருபர்.
திருவள்ளூர் தலைமை செய்தியாளர். எம் தனசேகர்.
