Sat. Jan 10th, 2026


குடியாத்தம் | வேலூர் மாவட்டம்
டிசம்பர் 26, 2025

தலைவராக வழக்கறிஞர் வி. ரஞ்சித் குமார் தேர்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) சார்பில், சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு,
வழக்கறிஞர்கள் வி. ரஞ்சித் குமார் மற்றும் ஜி.ஆர். மணிமுடி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில்,

வி. ரஞ்சித் குமார் – 124 வாக்குகள்,

ஜி.ஆர். மணிமுடி – 49 வாக்குகள்

பெற்ற நிலையில், வி. ரஞ்சித் குமார் தலைவராக வெற்றி பெற்றார்.

அதேபோல், செயலாளர் பதவிக்கு,
கே. இளங்கோ மற்றும் எஸ். விஜயகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில்,

கே. இளங்கோ – 106 வாக்குகள்,

எஸ். விஜயகுமார் – 65 வாக்குகள்

பெற்ற நிலையில், கே. இளங்கோ செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர் பதவிக்கு,
எஸ். தேவராஜ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், எஸ். தேவராஜ் 88 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பொருளாளர் பதவிக்கு,
தியாகு போட்டியிட்டு ஒருமனதாக/வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா
செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS