1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் – இருவர் கைது – நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில் காவல்துறையினர் கடுமையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சிவசங்கரன் அவர்களின் மேற்பார்வையில், கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில்,
கோட்டார் கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் சிங் என்பவரது மகன் சுதன் @ நண்டு சுதன் (வயது 33)
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உமர் அலி என்பவரது மகன் ஜோனாப் அலி (வயது 46)
ஆகிய இருவர் விற்பனை நோக்கத்திற்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப் பொருட்கள் இல்லா சமூகத்தை உருவாக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
வி. மணிகண்டன் வேலாயுதன்