விழுப்புரம் மாவட்டம்.
செஞ்சி அருகே மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் – மகிழ்ச்சியில் கல்வி வளாகம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்களத்தில் செயல்பட்டு வரும் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கல்லூரி வளாகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
டிசம்பர் 24, புதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவிற்கு,
டேனி கல்வி குழுமத்தின் தலைவர் ஜாஸ்பர் தலைமை தாங்கினார்.
செயலாளர் ஸ்டெல்லா பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஸ்டர் அருள் சாமுவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கல்வியாளர் டாக்டர் சக்திவேல், கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் கிறிஸ்துவின் சமுதாய சிந்தனைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, கிருஸ்துமஸ் பரிசுகள் மற்றும் கேக் வழங்கி சிறப்பித்தார்.
விழாவில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, டேனி கல்வியியல் கல்லூரி மாணவர் சற்குணம், கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து நடனம் ஆடி, பாடல்கள் பாடி, மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதனைத் தொடர்ந்து கிருஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டு, விழா மகிழ்ச்சியான சூழலில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,
பேராசிரியர்கள்: பரிதி ஓவியா, மரியசெல்வம், சரவணன்
பள்ளி ஆசிரியர்கள்: கயல்விழி தபிதா, விண்ணரசி, கனிமொழி, மகாலட்சுமி, அருள்மொழி, சூரிய பிரகாஷ், அஸ்வினி, சாமுண்டீஸ்வரி, கலைச்செல்வி, வெண்ணிலா, ஸ்ரீனிவாசன், சரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி சிறப்பாக தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில் பேராசிரியர் ஈஸ்வரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்
தமிழ். மதியழகன்
தமிழ்நாடு டுடே
