Sat. Jan 10th, 2026


பெரம்பலூர் :
கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த அமைச்சர், உடற்கூறாய்வு பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர், உடற்கூறாய்வு நிறைவடைந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,
மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து அரசு உதவிகளும் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நமது நிருபர்.

By TN NEWS