குற்றாலம் பகுதிகளில்
தடை செய்யப்பட்ட புகையிலை, இரவு நேர மதுபான விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றச்சாட்டு
மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கை
தென்காசி மாவட்டம், குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா வகைகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகாரின் படி,
குட்கா, சைனி, கூலி லீப், கான்ஸ், விமல் பாக்கு, கணேஷ் புகையிலை, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடைகளில் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை?
மேலும், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், சில சமூக விரோதிகள் இதை வெளிப்படையாக மேற்கொண்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மதுபான பாட்டில் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், கணேஷ் புகையிலை – ரூ.130,
ஹான்ஸ் – ரூ.120 என அதிக விலையில் விற்க படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
காவல்துறை நடவடிக்கையில் தடையா?
புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும் போது, சிலர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிப்போம் என மிரட்டுவதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, காலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் சட்டவிரோத விற்பனை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை செயல்படுகிறதா?
இந்த நிலையில்,
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செயல்படுகிறார்களா?
போதிய காவலர்கள் இப்பகுதியில் உள்ளனரா?
என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
✍️ ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர் – தென்காசி
