Sat. Jan 10th, 2026

தென்காசி விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் ஐயா சாமி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது,
தென்காசி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகள் தொழில், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணங்கள் ஆகிய துறைகளில் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டுள்ளன என்றும், ஆனால் விமான நிலைய வசதி இல்லாததால் அந்த வளர்ச்சி முழுமையாக வெளிப்படவில்லை என்றும் அவர் எடுத்துரைத்தார்.

வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விளக்கம்:

மேலும், இந்தப் பகுதிகளில் விளையும் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதியை ஏற்படுத்த, விமான நிலையம் மிக அவசியம் என வலியுறுத்தினார்.
தென்காசி விமான நிலையம் அமைக்கப்பட்டால்,
தென் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில்
தொழில் வளர்ச்சி
புதிய வேலை வாய்ப்புகள்
சுற்றுலா வளர்ச்சி
பொருளாதார முன்னேற்றம்
ஆகியவை பெரிதும் ஊக்கப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை கருணையுடன் பரிசீலனை செய்த மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆனந்தன் ஐயா சாமி,
“தென்காசி மக்களின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாகும்” என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

✍️ ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர் – தென்காசி

By TN NEWS