Sat. Jan 10th, 2026

தென்காசி.

தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் (UGSS) செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு தொடர்பான கருத்துக் கேட்பு கலந்தாய்வு கூட்டம், தென்காசி சசி மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் SDPI கட்சி சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மக்மூத் தலைமையில்,

நகர இணைச் செயலாளர் – ஜாஹிர் உசேன்

நகர பொருளாளர் – அகமது கபீர்

நகர செயற்குழு உறுப்பினர் – ஜமால் மைதீன்

மருத்துவ சேவை அணி நகர பொறுப்பாளர் – ஷாகுல் ஹமீது @ ஹாஜி

18-வது வார்டு கிளைத் தலைவர் – சலீம்

ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திட்டம் நடைமுறைப்படுத்தும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள், சாலை சேதம், குடிநீர் குழாய்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் திட்டக்குழு அதிகாரிகள்,
தென்காசி நகர்மன்ற தலைவர் R. சாதிர்,
துணைத் தலைவர் K.N.L. சுப்பையா,
நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன்,
நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி :
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் – தலைமை செய்தியாளர்


By TN NEWS