Wed. Dec 17th, 2025

விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில், 15.12.2025 முதல் 31.12.2025 வரை “பாதுகாப்பான பேருந்து இயக்கம்” விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. க. குணசேகரன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு வாரத்தின் தொடக்க நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு பேட்ஜ்களை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அணிவித்து, மேலாண் இயக்குநர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாரத்தின் போது,

சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றுதல்

வேகக் கட்டுப்பாடு மற்றும் கவனமான ஓட்டுநர் நடைமுறைகள்

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மரியாதையான அணுகுமுறை

பேருந்து இயக்கத்தின் போது ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

போன்றவை குறித்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழிப்புரம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து கிளைகளிலும் இதே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS