விழுப்புரம் மாவட்டம் | அரகண்டநல்லூர்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை, அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் இருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் IPS அவர்களின் உத்தரவின்பேரில், அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. தேவரத்தினம், திரு. லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் இணைந்து குடமுரட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் மூட்டை மூட்டையாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காரில் வந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள்
சதீஷ் (40) – உளுந்தூர்பேட்டை தாலுகா,
சக்திதாசன் (21) – மடப்பட்டு மெயின் ரோடு,
கலைச்செல்வி (42)
என தெரிய வந்தது.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 150 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி:
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்