Tue. Dec 16th, 2025



கள்ளக்குறிச்சி மாவட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், சின்னசேலத்தார் பி.எஸ். ஜெய்கணேஷ் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை MLA அவர்களிடம் விருப்ப மனு அளித்தார்.

இந்நிகழ்வின்போது, உளுந்தூர்பேட்டை வட்டார தலைவர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் அப்துல் வக்காப், மாவட்ட பொதுச் செயலாளர் கதர் ஜோதிவேல், ரிஷிவந்தியம் வட்டார தலைவர் கிருபானந்தம், ராதாகிருஷ்ணன், அபிலாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்தி:
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS