புதுக்கோட்டை, டிசம்பர் 13
இந்திய விமானப்படையில் ஆள் சேர்ப்பு தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பர வாகனம் (கேரவன்) மூலம் பிரசார நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கிற்கு அருகே நிறுத்தப்பட்ட விளம்பர வாகனம் மூலம், விமானப்படையின் விமானப்படங்கள், காணொளிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதன் வாயிலாக, விமானப்படையில் சேருவதற்கான கல்வித் தகுதிகள், பணிவாய்ப்புகள், சேர்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் மற்றும் விமானப்படையின் சிறப்பம்சங்கள் குறித்து புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் முனைவர் ஆரோக்கியராஜ், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், வெள்ளைச்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:
M. மூர்த்தி, மாவட்ட தலைமை செய்தியாளர், புதுக்கோட்டை.