Tue. Dec 16th, 2025

 

சின்னமனூர்

சின்னமனூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கள்ளர் மண்டபம் பின்புறம் உள்ள தெருவில் நடந்து சென்ற தனலட்சுமி என்ற பெண்மணியை, நேற்று தெரு நாய் ஒன்று கடித்தது.

இதையடுத்து, அவர் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நாய்க்கடி தடுப்பூசி செலுத்த முயன்றுள்ளார். ஆனால் அங்கு பணியாற்றி வந்த அரசு செவிலியர் அலட்சியமாகவும், பொறுப்பற்ற முறையிலும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்துவதில் கடும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு இருந்த ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய பின்னரே, தனலட்சுமிக்கு தாமதமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அவசர சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நகரில் அதிகரித்து வரும் தெருநாய்கள் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள்,
👉 சம்பந்தப்பட்ட செவிலியர் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,
👉 சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி தொடர்பாளர்
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர் & புகைப்படக் கலைஞர்

By TN NEWS