Wed. Dec 17th, 2025

 




டிசம்பர் 12 — உலக கணினி வரலாற்றில் மறக்க முடியாத நாள். நவீன நுண்செயலி (Microprocessor) தொழில்நுட்பத்திற்கான அடித்தளத்தை அமைத்த இன்டெல் (Intel) நிறுவனத்தின் இணை நிறுவனர் ராபர்ட் நாய்ஸ் (Robert Noyce) பிறந்த தினம் இன்று.

கணினி செயலி, ஒருங்கிணைந்த மின்சுற்று (IC), நவீன CPU வடிவமைப்பு — இவை அனைத்தும் இன்று உலகை மாற்றியவை. அந்த மாற்றப் புரட்சியின் முதன்மை முன்னோடிகளில் ஒருவர் தான் ராபர்ட் நாய்ஸ்.

இளமை & கல்விப்பயணம்:

1927 டிசம்பர் 12 அன்று அமெரிக்காவின் அயோவா மாநிலம், பர்லிங்டனில் பிறந்த ராபர்ட் நாய்ஸ், சிறுவயதிலிருந்து கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் ஆழ்ந்த ஆர்வமுடையவர்.

1945 – கிரின்னல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம்

1949 – கணிதம் & இயற்பியல் துறையில் B.A., Phi Beta Kappa விருதுடன்

1953 – MITயில் இயற்பியலில் முனைவர் பட்டம் (Ph.D.)

அதே காலகட்டத்தில், பெல் ஆய்வகங்களில் டிரான்சிஸ்டர் உருவானது. இந்த புதுமை உலகை மாற்றப் போகும் என்பதை நாய்ஸ் மிகவும் இளம் வயதிலேயே புரிந்துகொண்டார்.

டிரான்சிஸ்டர் காலத்தின் தொடக்கம்:



1956ல் ஃபில்கோ கார்ப்பரேஷனில் பணியாற்றும்போது ராபர்ட் நாய்ஸ், டிரான்சிஸ்டர் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான வில்லியம் ஷாக்லியை சந்தித்தார்.

ஷாக்லி தனது புதிய Semiconductor Laboratoryக்கு திறமையான இளைஞர் ஆராய்ச்சியாளர்களைச் சேர்த்துக் கொண்டார். அதில் முக்கியமானவர் நாய்ஸும் ஆவர்.

இந்த ஆய்வகத்திலிருந்து பின்னர் மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ் வரலாற்றையே மாற்றிய ‘Fairchild Eight’ எனப்படும் குழுவும் உருவானது.

இன்டெல் உருவானது எப்படி?

1968ல், ராபர்ட் நாய்ஸ் மற்றும் கோர்டன் மூர் இணைந்து ஃபேர்சில்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறி ஒரு புதிய கனவை உருவாக்க முடிவு செய்தனர்.

அதுதான்:

🔷 இன்டெல் (Intel Corporation) — 1968:

ஆண்ட்ரூ க்ரோவ் அவர்கள் மேலாண்மை திறனுடன் இணைந்து, மூவரும் உலகை மாற்றிய நிறுவனத்தை உருவாக்கினர்.

உலகின் முதல் நுண்செயலி — 1971:

இன்டெல் 1971ல் Intel 4004 என்கிற உலகின் முதல் வணிக நுண்செயலியை அறிமுகப்படுத்தியது.

இதுதான் இன்று கணினி, லேப்டாப், மொபைல், செயற்கை நுண்ணறிவு வரை… அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படை.

நாய்ஸின் IC கண்டுபிடிப்பு ஏன் முக்கியம்?

ஜாக் கில்பி ஆறு மாதம் முன்பே ஒருங்கிணைந்த மின்சுற்றை உருவாக்கினாலும்,
நாய்ஸின் வடிவமைப்பு உற்பத்திக்கு ஏற்ற முறையில் இருந்ததால் உலகளவில் IC தொழில்நுட்பம் வளர்ந்தது.

இன்றும் அனைத்து CPU, GPU, RAM, Motherboard Chips… அனைத்தும் நாய்ஸ் உருவாக்கிய IC முறைமையின் மேல் தழுவி உருவாக்கப்படுகின்றன.

இன்டெல் — உலக சில்லுத் துறையின் மைந்தன்

இன்டெல் நிறுவனத்தின் முக்கிய உற்பத்திகள்:

CPU செயலிகள்

மதர்போர்டு சில்லுத் தொகுப்புகள்

நெட்வொர்க் இடைமுக கட்டுப்படுத்திகள்

ப்ளாஷ் நினைவகம்

கிராபிக் சில்லுகள்

எம்பெடெட் பிராசசர்கள்

1980களில் இன்டெல் உலகின் மிகப்பெரிய சில்லு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது.
1991 முதல் ‘சில்லுத் துறையின் உலக நம்பர் 1’ என்ற நிலையை இன்டெல் தக்கவைத்தது.

இன்டெலின் “Intel Inside” விளம்பரப் பிரச்சாரம் தொழில்நுட்ப வரலாற்றின் மிகச் சிறந்த மார்க்கெட்டிங் முயற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

போட்டியாளர்கள்:

AMD

Samsung

Texas Instruments

Toshiba

STMicroelectronics

NVIDIA, VIA (Chipsets)

Broadcom, Marvell (Network)

விருதுகள் & கௌரவங்கள்:

ராபர்ட் நாய்ஸ் பல தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றார்:

Faraday Medal – 1979

Harold Pender Award – 1980

John Fritz Medal – 1989

இறுதி நாட்கள்:

ராபர்ட் நாய்ஸ் ஜூன் 3, 1990 அன்று டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் காலமானார்.
வயது: 62.

அவரின் தொழில்நுட்ப பங்களிப்புகள் இன்றும் உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

தகவல் ஆதாரம்:

Wikipedia

முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

தொகுப்பு:

ஷேக் முகைதீன்

இணை ஆசிரியர்.

By TN NEWS