Tue. Dec 16th, 2025

திருச்சிராப்பள்ளி – காலமும் கலாசாரமும் கூடிய தமிழின் உச்சி நகரம்:



✒️தொகுப்பு: ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்

தமிழகத்தின் இதயத்திலும், பாரம்பரியத்தின் உச்சியிலும் அமர்ந்து காலத்தையும் கலாசாரத்தையும் இணைத்துக் கொண்டிருக்கும் நகரம், திருச்சிராப்பள்ளி.
‘திருச்சி’ என்று இன்று அழகாகச் சுருக்கிப் பயன்படுத்தும் இந்தப் பெயரின் பின்னே ஆழம் மிகுந்த வரலாறும், ஆன்மீக பாரம்பரியமும், கல்விச் செழிப்பும் ஒளிந்து கிடக்கிறது.

பெயரின் பிறப்பு — மெய்ப்பொருள் நிறைந்த மரபு:

‘சிர’ = தலையாய / மேற்படை ‘பள்ளி’ = துறவிகள் தங்கிப் பயிலும் ஆன்மிகப் பள்ளி சமணம், சைவம், வைணவம் ஆகிய மூன்று சமயங்களிலும், மலையடிவாரங்களிலும், கற்பாறைகளின் உச்சிகளிலும் பழம்பெரும் ஆசாரம்–பள்ளிகள் இருந்ததால், இந்த ஊர்:

திரு + சிர + பள்ளி = திருச்சிராப்பள்ளி:

அதாவது திருவுடைய உயர்ந்த ஆன்மிகப் பள்ளிகள் கொண்ட தலம் என்று பொருள்படும். இன்று கூட, இந்தப் பெயரின் சாரம் போல் கல்வி நிலையங்கள், ஆய்வு மையங்கள், ஆன்மீகத் தளங்கள், வரலாற்று சின்னங்கள் நகரின் எல்லாத் திசைகளையும் நிரப்பிக் கிடக்கின்றன.

ஆலயங்களின் அன்னையூர் – சமயம் நிறைந்த திருச்சி:

திருச்சி எந்த சமயத்தவரிடமும் பகுத்தறிவோடு, பக்தியோடு பேசும் நகரம்.
சைவம் – வைணவம் – சமணம் அனைத்தையும் தாங்கி நிற்கும் பொதுநகரம் இதுவே.

வைணவம் – உலகின் மிகப் பெரிய செயல்படும் கோவில்: திருவரங்கம்

இருகாவிரிக்கிடையே அமைந்த சீரங்கம் ரங்கநாதரால் உலகறியப்படும் தெய்வீகத் தீவு.

அரங்கனாயகி உடனுறை பெருமாள் அலங்கரிக்கும் ஆன்ம தலம்.
சைவம் – திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்
அகிலாண்டேஸ்வரி உடனுறை இந்தைத் தலம், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தத்துவத்தை குறிக்கும் கோவில்.
மலைமேல் மேகமாய் நிற்கும் உச்சி பிள்ளையார்
திருச்சியின் அடையாளம்.பழங்கால சமணப் படுக்கைகள், கற்பாறை குடில்கள் அனைத்தும் இங்குள்ள பாறைகளில் காணப்படும்.

மற்ற குறிப்பிடத்தக்க பழங்கோவில்கள்:

வயலூர் முருகன் கோவில்

வெக்காளி அம்மன்

நாச்சியார் அம்மன்

எறும்பீஸ்வரர்

குழுந்தாழாயி – குழுமாயி அம்மன்

உக்கிரம காளி

நத்தார்ஷா பள்ளிவாசல்

தூய பவுல் ஆலயம்
இந்தப் பட்டியல் இரு கண்களும் மெய்ப் பெருமை கூறும் அளவு அழகுடையது.

உலகை வியக்க வைத்த வரலாறு – கல்லணை:



உலகின் முதல் மற்றும் நீண்ட நாள் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பணை.
கல்லணை, கரிகால சோழனின் பொற்கை வினை.
நீர் பங்கீட்டை ஆசியாவில் அறிவியல் முறைப் படுத்தித் தந்தத் தொழில்நுட்ப வரலாற்றின் முதன்மைச் சின்னம்.

பழங்காலத்திலிருந்து தற்போதுவரை – திருச்சியின் தொழில் வளர்ச்சி:

தொழில் சாலை & படைகலன் தொழில் சாலை

ரயில்வே தொழிற்சாலை – தென்னிந்தியாவின் மிகப்பெரிய பராமரிப்பு மையங்களில் ஒன்று

1964 லிருந்து மரமாக வளர்ந்த பாரத மின்மின் மிகுநிறுவனம் (BHEL)

சர்க்கரை ஆலைகள்

பேப்பர் மில்கள்

நவீன பால்பண்ணைகள்

பன்னாட்டு விமான நிலையம்

ஐடி பூங்கா – Navalpattu IT Park

பஞ்சப்பூர் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து முனையம்


திருச்சி இன்று கல்வி–தொழில்–பயணப் பெருநகராக உருவெடுத்துள்ளது.

கல்வியின் தலைநகரம் என்று அழைக்கக் கூடிய நகரம்:

திருச்சி என்றாலே கல்வியின் தலைநகரம்.

புகழ்பெற்ற பழைய கல்வி நிறுவனங்கள்

பிஷப் ஹீபர் பள்ளி / கல்லூரி

ஜோசெப் பள்ளி & கல்லூரி

நேஷனல் பள்ளி, கல்லூரி

ஜமால் முகம்மது கல்லூரி

EVR கல்லூரி

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி

ஹோலி கிராஸ் கல்லூரி

ஊர்முதனலட்சுமி பள்ளி–கல்லூரி


சிறப்பு உயர்கல்வி மையங்கள்:

NIT – இந்தியா முழுவதும் சிறந்த தொழில்நுட்ப கல்வி மையம்

IIM – தேசிய மேலாண்மை முதன்மை நிறுவனம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி வளாகம்)

விவசாயப் பல்கலைக்கழக வளாகம்

தேசிய சட்டப் பல்கலைக்கழக‌ம்

அரசு மருத்துவக்கல்லூரி (கி.ஆ.பெ. பெயரில்)

SRM, Dhanalakshmi Srinivasan, Kauvery, Apollo மருத்துவக் கழகங்கள்

திருச்சி கல்வியில் வளர்ந்ததற்குக் காரணம்—
மரம் போல் வேர் பதித்த பள்ளிகளும், வானம் போல் விரிந்த கல்லூரிகளும்.

நகரின் உயிர்ப்புள்ள பொது அமைப்புகள்:

அதிக நடைமேடை கொண்ட திருச்சி ரயில் நிலையம்

அருகருகே அமைந்த பேருந்து நிலையங்கள்

All India Radio

கோளரங்கம்

அருங்காட்சியகம்

காந்தி தங்கிய இடம்

வண்ணத்துப் பூச்சி வாழ்விடம் (பயோ-பார்க்)

இசை, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல் – ஒரே நகரின் பல முகங்கள்:

திருச்சி ஒரே நேரத்தில்
பழமை + சமயம் + தொழில் + கல்வி + கலாசாரம் + முன்னேற்றம்
என்ற ஆறு முகங்களையும் ஒருங்கே தாங்கும் அரிய நகரம்.

எழுத எழுத குறையாத நகரம் என்றால் அது திருச்சி தவிர வேறு எதுவுமில்லை.

முடிவுரை:

திருச்சி என்பது ஒரு நகரமல்ல;
காலத்தை இணைத்து நிற்கும் ஒரு பெரிய உயிருள்ள வரலாறு.
மலை உச்சியில் பிள்ளையாரின் அருள், இருகாவிரியின் வளம்,
கல்லணையின் பொறியியல் பெருமை, சீரங்கத்தின் ஆன்மீகம்,
கல்வி நிறுவனங்களின் ஞானம், தொழிற்சாலைகளின் உழைப்பு.

இவை அனைத்தும் சேர்ந்து தமிழரின் உச்சி பெருமையாக திருச்சியை உருவாக்குகின்றன.

 

By TN NEWS