Tue. Dec 16th, 2025


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கரும்புள்ளி வளைவுகள் (Black Spots) உடனடி சீரமைப்பு தேவைப்படும் முக்கியமான இடங்களாக உள்ளன.

இந்த நிலையில்,
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA,
விசிக தலைவர் தொல். திருமாவளவன் MP,
விசிக பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் MP ஆகியோருடன் இணைந்து,
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) தலைவர் சந்தோஷ் குமார் யாதவ் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

விபத்து நடக்கூடிய முக்கிய இடங்கள்:

வி. சாலை

சூர்யா கல்லூரி சந்திப்பு

திருவாமத்தூர் கூட்டு சாலை

விராட்டிகுப்பம் சாலை

ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை அருகே உள்ள சிறிய சுரங்கப்பாலம்

பனையபுரம் (கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை)


இந்த இடங்களில் பெரிய மேம்பாலங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக அமைக்க வேண்டியது அவசியம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

புதிய மேம்பாலங்களுக்கு சர்வீஸ் ரோடுகளை சிமெண்டு சாலைகளாக அமைக்க வேண்டும்.

2 ஆண்டுகளாக தாமதமாக கிடப்பில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் மேம்பாலப் பணியை உடனே தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும்.


NHAI தலைவரின் உறுதி:

மனுவை பெற்ற NHAI தலைவர் சந்தோஷ் குமார் யாதவ்,
குறிப்பிட்ட முக்கிய இடங்களுக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி தெரிவித்தார்.


விளக்கம் / பிரதி:
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சிச் மாவட்டம்

By TN NEWS