Tue. Dec 16th, 2025



டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன:

✔ பொது உடல் பரிசோதனை

✔ இரத்தச் சோதனை மற்றும் அடிப்படை ஆய்வுகள்

✔ கண் பரிசோதனை

✔ பெண்கள் நல ஆலோசனை மற்றும் பரிசோதனை

✔ மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு


உயர்தர மருத்துவர்கள், நிபுணர்கள் இணைந்து மக்கள் தேவைகளுக்கேற்ப உடனடி மருத்துவ பரிசோதனைகளையும் மருந்துகளையும் வழங்கினர்.

முகாம் துவக்க விழா!

காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள Shree BCR மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை,

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதிஷ்

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் P. பழனியப்பன்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் & கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தார்கள்.

நிகழ்வில், அரசு உயர்தர அலுவலர்கள், மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார ஊழியர்கள், கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், பொதுமக்கள், திரளாக பங்கேற்று மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.

மக்களின் உடல்நல பாதுகாப்பை முதன்மைப்படுத்தும் விதமாக இந்த முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்று பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS