Wed. Dec 17th, 2025

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி – மலர்தூவி மரியாதை

தருமபுரி – டிசம்பர் 6

மாநில அரசியலும், சமூக நீதி சார்ந்த போராட்டங்களிலும் மறக்க முடியாத தடம் பதித்த சட்ட மாமேதை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் P. பழனியப்பன் அவர்களின் முன்னிலையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்பேத்கரின் சமூக சிந்தனைகள், ஜனநாயக கட்டமைப்பிற்கான அவரின் பங்களிப்பு குறித்து நினைவுகூரும் வகையில் நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் R. கண்ணபெருமாள், MVT. கோபால், GVK. சரவணன், முனியப்பன், PK. அன்பழகன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். மேலும் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், T. அன்பழகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நகர செயலாளர்கள் KVK. சீனிவாசன், PK. முரளி, MA. வெங்கடேசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் GL. வெங்கடாசலம் (Ex. MLA) ஆகியோர் விழாவில் சிறப்பு பங்கேற்பாளர்களாக இருந்தனர்.

வழக்கறிஞர் அணியிலிருந்து TC. சந்திரசேகர், AV. குமார், குமார் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பாளர்கள் ஹரி பிரசாத், மகேஷ் குமார், மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர்கள் மற்றும் பல கழகத் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்பேத்கரின் நினைவுக்கு புகழ்வணக்கம் செலுத்தினர்.

சமத்துவம், கல்வி உரிமை, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கர் வலியுறுத்திய கொள்கைகளை முன்னெடுத்து செயல்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதிமொழி ஏற்புக் கொண்டனர்.

மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS