Tue. Dec 16th, 2025


03.12.2025
சென்னை

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கே மட்டும் குரல் எழுப்பி, வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என பாஜக மகளிர் அமைப்பை சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைக் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசினா சையத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகளிர் காங்கிரஸ் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்:

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மற்றும் வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் இணைந்து, பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாபெரும் மருத்துவ முகாம் நடத்தினர்.

வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி ஜூனைஸா பர்வீன் ஏற்பாடு செய்த இந்த முகாமில்:

ரத்த அழுத்தம் கண் பரிசோதனை பொதுவான மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை நடைபெற்றன.

பரிசோதனைக்கு வந்த மக்களுக்கு ஊட்டச்சத்து டானிக் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மாநிலத் தலைவர் ஹசினா சையத் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.

பிறந்த நாள் கொண்டாட்டம் – குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த தலைவர்

மருத்துவ முகாம் நிறைவில், ஹசினா சையத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்தார். பின்னர் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹசினா சையத் கருத்துக்கள்:

பாஜக பெண்மணி தலைவர்களுக்கு கேள்வி…?

“தமிழகத்தில் சம்பவம் நடந்தால் உடனே கேள்வி கேட்கும் பாஜக மகளிர் அமைப்பு, மணிப்பூர் உட்பட வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகளுக்கு ஏன் மௌனமாக இருக்கிறது?”என ஹசினா சையத் கேள்வி எழுப்பினார்.

பாஜக அரசியல், தேர்தல் நடைமுறை பற்றிய குற்றச்சாட்டுகள்:

பீகாரில் தேர்தல் காலத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ₹10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவது முன்னெப்போதும் நடக்காத செயல் என அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக, தேர்தல் ஆணையம், ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளுடன் கூட்டணி வைத்து மக்கள் ஜனநாயக உரிமைகளை குறைக்க முயல்கிறது என்றார்.

ராகுல் காந்தி பல முறை ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றார்.

பூத் கேப்சரிங் குறித்த கேள்விகளுக்கும் ஆணையம் மவுனம் சாதிப்பதை அவர் கண்டித்தார்.

மகளிர் பாதுகாப்பு – கூட்டணியை தாண்டி காங்கிரஸ் நிலை:

மகளிர் காங்கிரஸ் கூட்டணியை தாண்டியும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் வலுவாக குரல் எழுப்பி வருவதாக ஹசினா சையத் கூறினார்.

கோயம்புத்தூர், மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களிலும் மாநில மகளிர் காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

“வடமாநில விலைவாசி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஏன் மௌனம்?”

“தமிழகத்தில் விலைவாசி உயர்வு என்று கேள்வி கேட்கிற பாஜகவினர், வட மாநிலங்களில் ஏன் கேள்வி எழுப்பவில்லை? அங்கும் மக்களே வாழ்கிறார்கள் அல்லவா?”
என்று ஹசினா சையத் கேள்வி எழுப்பினார்.


தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர் : எம். யாசர் அலி

By TN NEWS