
02.12.2025 — சென்னை
தென் இந்தியாவின் முன்னணி TMT ஸ்டீல் உற்பத்தியாளர் நிறுவனமான ARS ஸ்டீல், சென்னை மாதவரம் பகுதியில் தனது ஏழாவது ஸ்டீல் கிடங்கை இன்று திறந்து வைத்துள்ளது.
புதிய கிடங்கு 18,000 சதுர அடியில் அமைக்கப்பட்டு, சென்னை முழுவதும் 2 மணி நேரத்திற்குள் ஸ்டீல் விநியோகம் செய்யும் வகையில் மேம்பட்ட லாஜிஸ்டிக் வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ARS ஸ்டீல் நிறுவனம் தற்போழுது சேலம், திருச்சி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், படப்பை மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் விநியோக வலைமைப்பு மேலும் வலுப்பெறுகிறது.
சென்னையில் அதிகரித்து வரும் கட்டுமான பணிகளுக்காக வியாபாரிகள் மற்றும் கட்டுமான தளங்களுக்கு வேகமாகவும் தடையின்றியும் ஸ்டீல் வழங்கும் நோக்கில் இந்த புதிய கிடங்கு தொடங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பு.
செய்தியாளர் சந்திப்பில் நிறுவனம் தெரிவித்ததாவது:
தென்னிந்தியாவில் முதன்முறையாக D-Quality TMT கம்பிகளை அறிமுகப்படுத்திய நிறுவனம் ARS ஸ்டீல்.
இந்தியாவில் முதல்முறையாக CRS 550 D TMT கம்பிகளை சில்லறை சந்தையில் கொண்டு வந்த நிறுவனமாகவும் ARS ஸ்டீல் திகழ்கிறது.
Spectro Test, Bend Test, DDS UTM 2.5 போன்ற முக்கிய தரப்பரிசோதனை சேவைகளும் வழங்கப்படுகின்றன.
நிறுவனர் & மேலாண்மை இயக்குநர்
திரு. அஸ்வினி குமார் பட்டி தெரிவித்ததாவது:
“சென்னையின் கட்டுமானத் துறைக்கு தடையற்ற, வேகமான, உயர்தர ஸ்டீல் வழங்குவது எங்களின் குறிக்கோள். மாதவரம் கிடங்கு எங்கள் விநியோக வலுவை மேலும் உயர்த்தும்.”
தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி
