Wed. Dec 17th, 2025




தென்காசி:
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி சமூகத்தைச் சேர்ந்த காசியம்மாள் நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சி:

இன்று புதூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செங்கோட்டை ஒன்றிய செயலாளரும்
புதூர் பேரூராட்சி தலைவருமான ரவிசங்கர் தலைமையேற்றார். பேரூராட்சி ஆணையாளர் குமார், கவுன்சிலர்கள்,மாவட்ட பிரதிநிதி மணிகண்டன்,
துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

காசியம்மாள் நியமன உறுப்பினராக பதவியேற்று மக்களுக்காக உழைப்பேன் என உறுதியுரை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமும், உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்களிக்கும் வாய்ப்பும் வழங்கும் அரசின் முன்முயற்சி பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்குரியது.

செய்தியாளர்:
அமல் ராஜ்,
தமிழ்நாடு டுடே,
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்.

By TN NEWS