Thu. Dec 18th, 2025


அரூர் மாவட்டத்தில் டிசம்பர் 29–ம் தேதி “இதுதான் திராவிட மாடல் – இதுதான் RSS–பாஜக ஆட்சி” பொதுக்கூட்டம் நடத்த முடிவு.

திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…!

அரூர், நவம்பர் 24:
அரூர் மாவட்டம் கடத்தூரில் வருகிற டிசம்பர் 29–ஆம் தேதி “இதுதான் திராவிட மாடல் ஆட்சி – இதுதான் RSS, பாஜக ஆட்சி” என்ற தலைப்பில் பெரிய பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட திராவிடர் கழகம் தீர்மானித்துள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தேக்கல் நாயக்கன் பட்டியில் நடைபெற்றது.

தலைமையேற்றவர்கள்:

கூட்டத்துக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையாற்றினார்.
வரவேற்புரையாற்றியவர் – மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் ஆசிரியர் மு. பிரபாகரன்.

மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் அண்ணா சரவணன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

பெரியார் உலகத்திற்கான நிதி திரட்டுதல் – பொதுக்கூட்ட ஏற்பாடுகள் முக்கிய விவாதங்கள்.

கூட்டத்தின் இறுதியில், திராவிடர் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் உரையாற்றி:
பெரியார் உலகம் (திருச்சி சிறுகனூர்) அமைப்பிற்கான நிதி திரட்டுதல், டிசம்பர் 29 பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துதல்,
பொது மக்களின் மிகப்பெரிய பங்கேற்பை உறுதி செய்தல்,
என பல முக்கிய அம்சங்கள் முன் வைக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1. கி. வீரமணி பிறந்தநாள் விழா, டிசம்பர் 2.

திராவிடர் கழக & பகுத்தறிவாளர் கழக தோழர்கள் கிராமமெங்கிலும் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு.

2. டிசம்பர் 29 பொதுக்கூட்டம் – கடத்தூர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி, பெரும் மக்கள் திரளுடன் கூட்டத்தை நடத்த தீர்மானம்.

3. பெரியார் உலகத்திற்கான நிதி – 2வது தவணை.

மாவட்டத்தின் சார்பில் நன்கொடை சேகரித்து, தலைவரிடம் வழங்க தீர்மானம்.

4. SIR திட்டத்திற்க்கு கண்டனம்:

ஒருங்கிணைந்த பிஜேபி அரசு முன்வைத்துள்ள SIR திட்டம் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி என கூட்டத்தில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

5. நிதி வசூல் குழுக்கள் அமைத்தல்.

மாவட்டம் & ஒன்றிய அளவில் நிதி வசூல் குழுக்கள் அமைக்கப்பட்டன:

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – ஊமை ஜெயராமன்

பாப்பிரெட்டிப்பட்டி குழு – மாரி கருணாநிதி தலைமையில்

கடத்தூர் குழு – அ.தமிழ்ச்செல்வன் தலைமையில்

அரூர் குழு – தகடூர் தமிழ்ச்செல்வி தலைமையில்

ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அறிவிப்பு:

பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஆசிரியர் மு. பிரபாகரன் (ரேவதி குடும்பம்) சார்பில் ₹1,00,000 நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, ஊடகவியலாளர் பாளை பசுபதி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் மு. பிரேம்குமார், பலர் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.முடிவில் மாணவர் அணி பொறுப்பாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆசிரியர் மு. பிரபாகரன் அவர்களின் குடும்பம் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

தொகுப்பு:

வே.பசுபதி
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி.

By TN NEWS