தருமபுரி, பாலக்கோடு தொகுதி, நவம்பர் —
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி MP கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.
காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் MVT. கோபால்
காரிமங்கலம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் R.கண்ணபெருமாள், மாரண்டஅள்ளி பேரூர் கழகச் செயலாளர் MA. வெங்கடேசன் மேலும் மாதேஸ்வரன், தனகோட்டி, போத்துராஜ், கோவித்தன், பலராமன், திருப்பதி, சக்தி, இளங்கோ, கண்ணப்பன், மாறன், துரைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முன்னோடிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

