Sat. Dec 20th, 2025

தென்காசி — நவம்பர் 25

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா, கீழ்வீராணம் ஊராட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வ கணேஷ் என்பவருக்கு, 2020ம் ஆண்டு அரசின் இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரத்தை, அவரது தோட்டத்திற்கு தனி மீட்டர் மூலம் இணைக்க வேண்டியிருந்தது.

இந்த இணைப்பை வழங்குவதற்காக, தென்காசி மின்வாரியத்தின் இளைய பொறியாளர் (JE) பிரேம் ஆனந்த், ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல், கண்ணுக்குள் கார்
செல்வ கணேஷின் புகாரின் பேரில், தகவல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் சென்றது.
அதன்படி, துறை அதிகாரிகள் பவுடர் தடவிய லஞ்சத் தொகையாக ரூ. 7,000 தயார் செய்தனர்.

JE பிரேம் ஆனந்த், இந்த பணத்தை நேரடியாக பெறாமல், கழுநீர்குளத்தை சேர்ந்த துரை என்ற நபரிடம் கொண்டு வரச் சொல்லியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிரடி வலைவீச்சு, கையும் களவுமாக பிடிப்பு:

துரை பணம் பெற்ற தருணத்திலேயே, மறைவாக கண்காணித்து வந்த தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கவைத்து, துரை மற்றும் JE பிரேம் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம், வீரகேரளம்–தென்காசி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு டுடே, தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
TNT அமல் ராஜ்

By TN NEWS